வளர்ப்பு நாய்களைத் தாக்கும் "கெனைன் பார்வோ வைரஸ்" கால்நடை மருத்துவமனைகளை அணுகி, தடுப்பூசி போட அறிவுறுத்தல்
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் ஒன்றான நாய்களை மழைகாலத்தில் தாக்கும் கெனைன் பார்வோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கெனைன் பார்வோ வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவி, நாய்களுக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, வாந்தியை ஏற்படுத்தி, சோர்வை உண்டாக்கும் என்றும் உடனடி மருத்துவம் காணா விட்டால் அவை உயிரிழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.
கெனைன் பார்வோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாயின் சிறுநீர், எச்சம், மலத்தில் இருந்து கிருமிகள் காற்றில் பரவி, மற்ற நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
எனவே உடனடியாக கால்நடை மருத்துவமனைகளை அணுகி, நாய்களுக்குத் தடுப்பூசியை போடுவது நல்லது என்றும் கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Comments